top of page

விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்கள் - பக்கங்கள் 311

SKU: CSV0001091
₹300.00Price

விக்ரமாதித்யனின் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிஞர்கள் | Vikramadithyanin selected poetries

கவிஞர் விக்ரமாதித்யன்

 

 

தமிழ்க் கவிதை மரபின் நீண்ட நெடிய தொடர்ச்சியின் கடைசிக் கண்ணியாகத் தன்னைப் பாவிக்கும் புதுக்கவிஞனான விக்ரமாதித்யன் , வாழ்க்கைப் பார்வை , உள்ளடக்கம் சார்ந்து நவீனத்துக்கும் மரபுக்கும் இடையிலான திரிசங்கு நிலையில் இருக்கிறார் . யாத்திரையில் இருக்கும்போது வீட்டைப் பற்றிய ஞாபகம் ; வீட்டிலிருக்கும்போது யாத்திரை பற்றிய ஞாபகம் ; மனம் செல்லும் இடத்தில் உடல் இல்லை ; உடல் செல்லும் இடத்தில் மனம் இல்லாமல் போகும திரிசங்கு நிலைதான் விக்ரமாதித்யனின் வாழ்வும் கவிதையும் . மனமும் உடலும் அபூர்வமாக ஒத்திசைந்திருக்கும்போதான கவிதைகளையும் அவர் எழுதியிருக்கிறார் .

 

நாடோடி , சித்தர் , யாத்ரிகர் என விக்ரமாதித்யனுக்குப் பல படிமங்கள் . வாழ்க்கை அவரை நாற்திசைகளிலும் தூக்கியெறிந்து சிதறடித்திருக்கிறது . ஆனால் தனது இதயத்துக்கு அருகில் அவர் காலம்காலமாகப் பராமரித்துவரும் சுயத்தை , தனது செருப்பைப் போலவோ உடைகளைப் போலவோ தொலைக்கவே முடியாதவர் விக்ரமாதித்யன் . அந்தச் சுயம்தான் விக்ரமாதித்யன் என்ற கவி ஆளுமையின் சொர்க்கமும் நரகமும் .
- ஷங்கர்ராமசுப்ரமணியன்

 


பக்கங்கள் 311
விலை ரூபாய் 300/மட்டுமே

 

புத்தக தேவைக்கான தொடர்புக்கு;
அ சஞ்சய் பெருமாள்

+91 73585 77246 / 88709 40330

San's புக் ஷெல்ப்

bottom of page